நேரம் !!!

0 comments
உன் கரம் கோர்த்து கதை பேச நேரம் உண்டு என்னிடம்!
            என் கதை கேட்டு கண் மலர நேரம் இல்லை உன்னிடம்!!!!!!!
வானளவு வாரி வழங்க வார்த்தைகள் உண்டு என்னிடம்!
            தேனாக தேற்றி தேதி ஒதுக்க நேரம் இல்லை உன்னிடம்!!!!!!
வீணையென நான் மாற ஆசை உண்டு என்னிடம் !
            வீணாக பொழுதை கழிக்க விருப்பம் இல்லை உன்னிடம்!!!!!!

காற்றின் மொழியில் கீதம் இசைக்க நாதம் உண்டு என்னிடம் !
            வெற்றியின் சுவையினை சுவைக்க  சுவை  இல்லை உன்னிடம்!!!
போற்றி புகழ பல கோடி கோரிக்கைகள் உண்டு என்னிடம்!
            நெற்றி வேர்வையின் துளிகளை துடைக்க  நொடி  இல்லை உன்னிடம்!!!

நித்தம் உன் நினைவுகளில் நீந்த நேசம் உண்டு என்னிடம்!
            ரத்தம் உறைய பித்தம் பிடிக்கும் மனம் இல்லை உன்னிடம்!
சத்தம் போட்டு சண்டையிடும் இயல்பு உண்டு என்னிடம்!
சித்தம் எல்லாம் செலுத்த நாழி இல்லை உன்னிடம்!! 

நேரமெல்லாம் நீயானாய் என்னிடம் !!!!!
எனக்கான நேரம் என்று கிடைக்கும் உன்னிடம்???????


Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere