தொடுவானம் !

0 comments

என் மேல் தவழ வந்த மழை
காற்றின்   சீற்றத்தால் தொலைந்து போனது!!
யாரிடம் கோபம் கொள்வது?-    
 என் கை தொடும் தூரத்தில் 
  நீ இருந்தும் கதறிய என் விழிகள் 
உன்னை பார்ப்பது உனக்கு மட்டும் ஏன் புரிவதில்லை??
உன் குரல் கேக்கும் திசை நோக்கி தேசியென திரிகிறேன் நான் !!
உன் குழம்பிய மனமுன்- 
என் கலங்கிய கண்ணும்
ஒன்றாய் இணைய மறுக்கிறது எப்பொழுதும் ??????
மீண்டும் வசந்தம் வீசும் 
தேடி தான் பாரேன் !
 உரக்க ஒரு முறை கூறேன்
 இக்கணமே வருவேன்..
 உந்தன் கனமான மௌனத்தை சுமக்க !!!!!

மழை!!

0 comments
மண்ணின் மனமும்
பெண்ணின் குணமும்
தென்னையின் வளமும்
விண்ணளவு சுரக்கும் பொன்னாம் !!


பசுமையின் சிறப்பும்
கருமையின் விரிவும்
பெருமையென கொணரும்
புதுமையென பொழியும் அழகாய்!!


மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
மக்களுக்கு உயிரூட்டும் உணவாய்
மனமும் குணமும்
மனதோடு நிறைந்திடும் இதமாய் !!


பழமையும் புதுமையும்
பரவசமாய் படர்ந்திடும் பதமாய்
பன்னீரூம் செழுநீரும்
விண்ணின் நீராகும் சிறப்பாய்!!


கானல் நீரும் காணா நீராகி
காதல் புரியும் காற்றாகி
கண் முன்னே சுரக்கும் உயிராகி
வெண் மேகம் பொழியும் அருவியாய் !!











Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere